முகப்பு /செய்தி /கரூர் / மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை? - கரூரில் ரயில்வே இணையமைச்சர் விளக்கம்!

மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் கட்டண சலுகை? - கரூரில் ரயில்வே இணையமைச்சர் விளக்கம்!

மத்திய ரயில்வே இணையமைச்சர்

மத்திய ரயில்வே இணையமைச்சர்

Minister of State for Railways Darshana Darshana Jardosh Visit Karur | விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ், கரூர் யில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, கண்காணிப்பு காமிராக்கள் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிற்றுண்டி அங்காடியில் இரண்டு டீ வாங்கிய அமைச்சர் அதற்கான தொகை 20 ரூபாயை பே.டி.எம் இணையதளம் மூலம் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ், விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு வருகிறோம் என்றும் கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டண சலுகை குறித்து பரிசீலிக்கப்படும். 75 ரயில் நிலையங்கள் நகர்ப்புற ரயில் நிலையங்களாக மாற்றப்பட உள்ளதாக கூறினார்.

இதனையடுத்து கரூரில் ஜவுளி ஏற்றுமதி உரிமையாளர்கள் மற்றும் கைத்தறி துணி நூல் உற்பத்தியாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜார்தோஷ் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கோரோனா தொற்றுக்குப் பிறகு இந்திய ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இங்கிலாந்தை விட அதிகமாக உள்ளது என்றும் கோவிட் தொற்றுக்குப் பிறகு இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கான இலக்கு 400 பில்லியன் நிர்ணயிக்கப்பட்டதாக கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய  ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ்

பருத்தி விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் சிறிது பாதிக்கிறார்கள். இறக்குமதி பருத்தி உள்ளிட்ட வைகளையும் தொடர்ந்து மத்திய அரசு கவனித்து வருகிறது. மத்திய அரசு மித்ரா பார்க் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்பட உள்ளது எனவும் ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: கார்த்திகேயன்

First published:

Tags: Karur, Local News