கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும் பள்ளிகளின் அடிப்படை வசதி செயல்பாடுகள் குறித்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உடன் ஆய்வு மேற்கொண்டார்.
வட்டார கல்வி அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு, வட்டார கல்வி அலுவலர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தது குறித்த விவரங்கள் மட்டும் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பள்ளிகளிலும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும், என்னும் எழுத்து திட்டம் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வி தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறதா, மாணவர்களின் கற்கும் திறன் குறித்தும், வருகை பதிவு குறித்தும், இடைநிற்றல் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து 135 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியரின் கற்பித்தவர்கள் குறித்தும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உள்ளார்களா, பள்ளி அடிப்படை வசதி குறித்தும், கட்டிட தன்மையை குறித்தும் கேட்டறிந்தார். அந்த பள்ளி வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூணினை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பள்ளி கல்வித்துறை ஆனது மிகப்பெரிய துறையாகும். இந்த துறையின் அமைச்சராகிய நான் பள்ளிகளில் 77 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அரசு பள்ளிகள் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம் எனவும்,
குளித்தலை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வருகை பதிவேடு மற்றும் அவர்களின் ஆய்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து எம்எல்ஏக்களின் அனுமதி உடன் தான் அந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அரசியல் பாகுபாடு பார்க்க கூடாத இந்த துறையில் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்கள் திறன் மிக்கவர்களாக அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் என்றும், அரசுப் பள்ளிகளில் உரிய வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடையே கூட்டங்கள் மற்றும் நாடகங்கள், கருத்தரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Government school, Karur, Minister Anbil Mahesh