Home /News /karur /

பள்ளி மாணவிகளை மிரட்டி மது குடிக்க வைத்த இளைஞர்... சீருடையில் தள்ளாடிய மாணவிகள் - கரூரில் பரபரப்பு

பள்ளி மாணவிகளை மிரட்டி மது குடிக்க வைத்த இளைஞர்... சீருடையில் தள்ளாடிய மாணவிகள் - கரூரில் பரபரப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

Karur district News: கரூரில் மதிய உணவிற்கு பள்ளி மாணவிகளை அழைத்த இளைஞர், அவர்களை வற்புறுத்தி ஒயின், பீர் குடிக்க வைத்ததால், மாணவிகள் பள்ளி சீருடையில் மது போதையில் பொது இடத்தில் தள்ளாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொது தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், 3 மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள ஓர் தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர்.

    அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் அந்த மாணவிகளுக்கு ஒயின் மற்றும் பீர் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.  அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட, மற்ற 2 மாணவிகளும் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்ததுடன்,  மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவசர எண் 100-க்கு அழைத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    Must Read : தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    கைது செய்யப்பட்ட தினேஷ் (எ) தீனா


    இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்ற தீனா (22), மூன்று மாணவிகளையும் மதிய உணவுக்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ​​ மூன்று மாணவிகளையும் ஒயின், பீர் குடிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் தினேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Crime News, Karur, School students

    அடுத்த செய்தி