ஹோம் /நியூஸ் /கரூர் /

வன விலங்குகளை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.. கரூர் வனத்துறை நடவடிக்கை

வன விலங்குகளை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.. கரூர் வனத்துறை நடவடிக்கை

கைதானவர்

கைதானவர்

Karur District News : கரூரில் வன விலங்குகளை வேட்டையாடிய சிங் என்பவரிடம் இருந்து வனவிலங்கான 1 மரநாய், 2 காட்டுப்பூனைகள், 3 முயல்கள், 2 கெளதாரி, துப்பாக்கி, செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்ட வன அலுவலருக்கு வன விலங்குகளை மர்ம நபர் வேட்டையாடி எடுத்துச்செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கரூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட செம்மடை, வாங்கல், கட்டளை பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வாங்கப்பாளையம் - வாங்கல் சாலையில் செல்லும்போது அருகம்பாளையம் அருகில் வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அவரை பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவரிடம் வேட்டையாடப்பட்ட வன விலங்குகள் இருப்பது தெரியவந்தது, அரசு காலனி அடுத்த நரிக்குறவர் காலனியை சேர்ந்த திருப்பூர் சிங் என்பவர் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க : திடீரென வெடித்து சிதறிய செல்போன் பேட்டரி... வைரலாகும் வீடியோ

அவரிடமிருந்து ஒரு மரநாய், 2 காட்டுப்பூனைகள், 3 முயல்கள், 2 கெளதாரி ஆகியவற்றையும் மேலும் அவர் பயன்படுத்திய துப்பாக்கி, செல்போன், வேட்டைக்கு பயன்படுத்தும் ஹெட் லைட் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Karur, Local News