ஹோம் /நியூஸ் /கரூர் /

37நாள் பிஞ்சு குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை - கரூரில் அதிர்ச்சி சம்பவம்

37நாள் பிஞ்சு குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை - கரூரில் அதிர்ச்சி சம்பவம்

உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர்

உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர்

குடும்ப பிரச்சனை காரணமாக கடுமையான மன அழுத்ததில் இருந்த மோகனாம்பாள் அடிக்கடி உளறி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur | Tamil Nadu

  கரூரில் தனது 2 குழந்தைகளையும் வீட்டில் விட்டு  கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(33). கட்டிட தொழிலாளியான இவருக்கு மோகனாம்பாள்(32) என்ற பெண்ணுடன் திருமணமாகி 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.இவர்கள் குடும்பமாக மணவாடி பகுதியில் வசித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கடுமையான மன அழுத்ததில் இருந்த மோகனாம்பாள் அடிக்கடி உளறி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன் தினம் சிவானந்தம், மனைவி மற்றும் 2 குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் படி மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

  இதனை தொடர்ந்து நேற்று மோகனாம்பாளின் அக்கா, சிவானந்தத்தை அலைபேசியில் தொடர்பு கொண்டு மோகனாம்பாளை காணவில்லை என தெரிவித்துள்ளார். இதை கேட்டு அச்சமடைந்த சிவானந்தம், மோகனாம்பாளை தீவிரமாக தேடி வந்த நிலையில், தனியார் தோட்டத்து கிணற்றின் அருகே அவரது செருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிணற்றில் விழுந்திருக்கலாம் என அச்சமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க | நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சம்மன்...

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த மோகனாம்பாளின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 வயது சிறுவனையும், பிறந்து 37 நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை தனியாக தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Crime News, Karur, Suicide