ஹோம் /நியூஸ் /கரூர் /

“எல்லா இடமும் நம்ம இடம்தான்..”மிரட்டலான வாரிசு ட்ரெய்லர்.. கரூரில் விஜய் ரசிகர்கள் ஆராவாரம்

“எல்லா இடமும் நம்ம இடம்தான்..”மிரட்டலான வாரிசு ட்ரெய்லர்.. கரூரில் விஜய் ரசிகர்கள் ஆராவாரம்

வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்

வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்

Varisu : கரூரில் வாரிசு ட்ரெய்லர் வெளியீடு விஜய் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூரில் வாரிசு ட்ரெய்லர் வெளியீடு விஜய் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாட்டம்.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது. வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு நிகழ்ச்சியை கண்டுகளிக்க கரூர் ராமானூர் பகுதியில் உள்ள ஒரு  திரையரங்கில் ரசிகர்கள் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விஜய் படம் வெளியாகும் நேரத்தில் ரசிகர்கள் காட்சிக்காக சிறப்பு கூப்பன்கள் விநியோகிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை திரையரங்கில் ட்ரெய்லர் வெளியீட்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக, கரூர் ரசிகர்கள் சிறப்பு கூப்பன்கள் அச்சிட்டுள்ளனர்.

திரையரங்கில் வாரிசு திரைப்பட ட்ரெய்லரை கண்டு ரசிக்க திரைப்படக் காட்சி ஒன்றை ரத்து செய்து, கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 400 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் ட்ரெய்லர் காட்சிக் ஓட தொடங்கின.

' isDesktop="true" id="867437" youtubeid="9fux9swQ5AQ" category="karur">

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் காட்சியை பார்த்த 1000 -க்கு மேற்பட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்ட வாரிசு ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் தளபதி, தளபதி என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

பின்னர் பட்டாசு வெடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்: கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Actor Vijay, Cinema, Karur, Varisu