கரூரில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வருகைக்காக அவசர அவசரமாக போடப்பட்ட சாலையில் தனியார் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் நேற்று கரூர் வந்தடைந்தார். முதல்வர் வருகையையொட்டி சாலைகளை நெடுஞ்சாலை துறையினர் அவசர அவசரமாக சீரமைத்தனர்.
அதன் ஒரு பகுதியான கரூரிலிருந்து தாந்தோணிமலை செல்லும் முக்கிய சாலையான மாவட்ட ஆட்சியர் சாலையில் சீரமைப்பு பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் இருந்து வரும் பிரதான சாலையில் போடப்பட்டிருந்த இருந்த தார் சாலையில் நேற்று தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு வேலை ஆட்களை ஏற்றி சென்ற பேருந்தின் ஒருபுர சக்கரம் சிக்கிக் கொண்டது.
பேருந்து ஒருபுறம் சாய்ந்ததால் பேருந்தில் இருந்த தொழிலாளிகள் பயத்துடன் அலறினர். நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் காயமின்றி மீட்கப்பட்டனர். காவல்துறையினர் பேருந்தை மீட்டு அனுப்பிவைத்தனர். முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக தரமற்ற முறையில் சாலையை போடுவது விபத்து ஏற்படும் வகையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.