ஹோம் /நியூஸ் /கரூர் /

டாஸ்மாக் பாரில் வீச்சருவாளுடன் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்.. கரூரில் பயங்கரம்

டாஸ்மாக் பாரில் வீச்சருவாளுடன் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்.. கரூரில் பயங்கரம்

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

கரூரில் டாஸ்மாக்கில் தகராறு செய்த இளைஞர்கள் பணம் தராத டாஸ்மாக் ஊழியரை வீச்சருவாளின் பின்பக்கமாக தாக்கி விட்டு தப்பியோட்டம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூர் அருகே டாஸ்மாக் பாரில் வீச்சருவாளுடன் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்களின்  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  கரூர் மாவட்டம், ஆத்தூரில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடையும், அதை ஒட்டிய பாரும் செயல்பட்டு வருகிறது.

  நேற்று மாலை அந்த பாருக்கு வந்த இளைஞர்கள் 3 பேர் பாரில் வேலை பார்க்கும் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுக்கவே கோபமடைந்த இளைஞர் ஒருவர் நீண்ட வாளை எடுத்து வந்து அந்த ஊழியரை தாக்க முற்பட்டுள்ளார்.

  அப்போது அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் அதனை தட்டிக் கேட்க முற்பட்ட போது அவர்களை வீச்சருவாளின் பின்பக்கமாக திருப்பிப் பிடித்து அந்த இளைஞர் தாக்கியுள்ளான். இது தொடர்பான வீடியோக்கள் அங்கு பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

  Also see... திருவாரூர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

  தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர், தி.கார்த்திகேயன், கரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Karur, Tasmac