ஹோம் /நியூஸ் /கரூர் /

பாலியல் தொல்லையால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் போக்சோவில் கைது

பாலியல் தொல்லையால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்ட ஆசிரியர்

கைது செய்யப்பட்ட ஆசிரியர்

ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்து வந்ததால் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur | Tamil Nadu

  கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

  கரூர் அருகே புலியூரில் உள்ள எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார் அரசு உதவி பெறும்  உயர்நிலைப்பள்ளி உள்ளது.  இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

  இதனை அறிந்த உறவினர்கள் மாணவியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் பாபு என்பவர் தன்னை இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறி பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

  இதையும் படிங்க | திருநங்கைகளின் முடியை அறுத்த விவகாரம்.. பேச மறுத்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக வாக்குமூலம்..!

  இதனை கேட்ட பெற்றோர், மாணவிக்கு ஆறுதல் கூறிவிட்டு, பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரிலும், மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின் பேரிலும் போலீசார் ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Child Abuse, Crime News, Karur, Pocso, Sexual abuse