10 ஆண்டுகளுக்கு முன் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதிக்கு வந்த மனநலம் பாதித்த ஒருவர், யாராவது கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் மீடியனில் அரளி செடி ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டு காலத்தை கழித்து வந்தார். திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நாகம்பள்ளி பிரிவு சாலை ஓரத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசை போட்டு, முதியவரை அங்கு கொண்டுவந்து சிலர் விட்டுள்ளனர்.
அதன்பின்னர் உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்ட நிலையில் அந்த முதியவர் காணப்பட்டார். நிர்வாண சித்தர், தகர கொட்டாய் சித்தர், மலைக்கோவிலூர் சித்தர் என அவர் பற்றி தகவல் பரவ, பக்தர்கள் வருகை, உண்டியல் வசூல் என அந்த இடமே பரபரப்பானது.சில நாட்களுக்கு முன் இங்குவந்த சிலர், தலைகீழாக நடனம் ஆடி, பக்தி பாடல்கள் பாட, சித்தரை பற்றி அறியாமையில் இருந்துவிட்டோமே என இப்பகுதி மக்களையே நினைக்க வைத்துவிட்டனர்.
இந்நிலையில் மனநலம் பாதித்தவரை வைத்து சிலர் பண வசூலில் ஈடுபடுவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தன்னார்வலர்கள் புகாரை தட்டிவிட, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தகர கொட்டகைக்கு விரைந்தனர். அங்கு உடல்நலம், மனநலம் பாதித்த நிலையில் இருந்த முதியவரை மீட்டு கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் கார்டுடன் யாரெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - உணவுத்துறை விளக்கம்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karur