ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு.. லைட் ஆன் செய்த போது நேர்ந்த துயரம்!

கரூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு.. லைட் ஆன் செய்த போது நேர்ந்த துயரம்!

உயிரிழந்த சிறுவன்

உயிரிழந்த சிறுவன்

கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் லைட் ஆன் செய்ய சென்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur

  கரூர் அருகே லைட் ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம்  பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54.) இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இவரது மகன் கௌசிக் (17), கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம்  வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இவர் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின்விளக்கை ஆன் செய்வதற்காக வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார்.

  அப்போது மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

  சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சுப்பிரமணியன் தனது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

  சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Death, Karur, School student