Home /News /karur /

புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு துரோகம் - கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தர்ணா

புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு துரோகம் - கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தர்ணா

கலாராணி தர்ணா போராட்டம்

கலாராணி தர்ணா போராட்டம்

Karur | கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக தலைமை உத்தரவை மீறி 2 வது முறையாக  திமுக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியின் தலைவர் தேர்தல் ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. திமுக கூட்டணியில் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய நிலையில், போதிய ஒத்துழைப்பு இல்லாததால் முதல் முறை நடைபெற்ற தேர்தலில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பேரூராட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர் புவனேஸ்வரி கட்சி தலைமை உத்தரவை மீறி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தலைவர் பதவிக்கான மறு தேர்தல், தேர்தல் அலுவலர் லீலா குமார் தலைமையில் இன்று நடைபெற்றபோது மீண்டும் திமுக உறுப்பினர்கள் சார்பாக புவனேஸ்வரி முன்மொழியப்பட்டு தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக கூட்டணி கட்சி உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி அதிருப்தி அடைந்து, பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்.

    தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு எதிராக திமுக தலைமை உத்தரவை மீறி தலைவர் தேர்தல் நடந்துள்ளதால் தனக்கு உரிய நியாயம் வேண்டும் என்று கலாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    அப்போது பேரூராட்சி அலுவலகம் முன்பு கலாராணியின் மகன், மகள் உள்ளிட்டோர் கூடினர். அவர்களை அங்கிருந்து வெளியேற சொன்ன போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டணி கட்சி தர்மத்தை மீறி தலைவர் தேர்தலில் திமுக உறுப்பினர் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலா ராணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    புலியூர் பேரூராட்சி திமுக செயலாளரும், பேரூராட்சி துனை தலைவருமான அம்மையப்பன் உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு மூன்று முறை தேர்தலை நடத்த விடாமல் தடுத்த நிலையில் நான்காவது முறையாக திமுக உறுப்பினர் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினர் கலாராணியை சந்திக்க சென்ற கலாராணியின் மகன், மகளை பேரூராட்சி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் நகர காவல் ஆய்வாளர் விதுன்குமார் ஒருமையில் பேசி, மிரட்டி வெளியே அனுப்பினார்.

    தர்ணாவில் கலாராணி


    Also see... கோவை மேம்பாலத்தில் தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன? சென்னை ஐஐடி குழு

    தொடர்ந்து பேரூராட்சி திமுக செயலாளர் அம்மையப்பனுக்கு  ஆதரவாக, அதிகாரிகள்,  காவல்துறை செயல்பட்டதாக கூறி கலாராணியின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Communist Party, DMK, Karur

    அடுத்த செய்தி