Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூர் புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா: 5ஆயிரம் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

கரூர் புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா: 5ஆயிரம் பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம்!

கரூர் புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

கரூர் புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா

Karur Puduvangalamman temple | வாங்கல் பகுதியில் அமைந்துள்ள புதுவாங்கலம்மன் கோவில் வரை 10 கிலோமீட்டர் தூரம்தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் 5அயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூரில்  அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என 5000க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வரும் 26ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் தீர்த்த குடம் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கரூர் நகரப் பகுதியில் இருந்து கரூர் பேருந்து நிலையம், ஜவஹர் பஜார், ஐந்துரோடு, வழியாக  வாங்கல் பகுதியில் அமைந்துள்ள புதுவாங்கலம்மன் கோவில் வரை 10 கிலோமீட்டர் தூரம்தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித தீர்த்த குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் குதிரை காவடி, யானை மேல் காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் திரளாக 5000க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Annamalai, Karur, Local News