கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் கன
மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணைக்கு வினாடிக்கு 1,15,400 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
அணையில் இருந்து 1,14,400 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கதவணையில் இருந்து பாசனத்திற்காக கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடியும், புதிய கட்டளை கேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு நீர் சேகரிப்பு கிணறுகள் மாயனூர் கதவணை ஒட்டி உள்ள கட்டளை பகுதியில் அமைந்துள்ளன. இங்கிருந்து நீர் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள தான்தோன்றிமலை பகுதிக்கு வழங்கப்படுகிறது.
காவிரியில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மாநகராட்சி நீர் சேகரிப்பு கிணறுப்புகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் கட்டளை பகுதிக்கு சென்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேயர்-துணை மேயர் ஆய்வு
அங்கே தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால், நீர் சேகரிப்பு கிணறுகளுக்கு இருவரும் பரிசல் மூலம் கிணறு இருக்கும் பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள நீர் சேகரிப்பு கிணறு மற்றும் இயங்காமல் இருந்த ஜெனரேட்டர் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர், டீசல் கொண்டு ஜெனரேட்டர் மூலம் பம்புகளை இயக்கி குடிநீர் வழங்க உத்தரவிட்டனர்.
Must Read : வீட்டிற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு... குமரி ஆட்சியர் அலுவலகத்தில் தாய்-மகள் தர்ணா
இதற்காக பரிசல் மூலம் கேன்களில் டீசல் கொண்டு செல்லப்பட்டு ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டன. மாலைக்குள் முழுமையாக குடிநீர் வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார்.
செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.