முகப்பு /செய்தி /கரூர் / சிங்கப்பெண்.. ஆற்றில் தத்தளித்த 3 சிறுமிகளை கணநேரத்தில் காப்பாற்றிய கீர்த்தனா..!

சிங்கப்பெண்.. ஆற்றில் தத்தளித்த 3 சிறுமிகளை கணநேரத்தில் காப்பாற்றிய கீர்த்தனா..!

மாணவி கீர்த்தனா

மாணவி கீர்த்தனா

Karur Death : கரூர் காவிரியாற்றில் சிக்கி தத்தளித்த 3 சிறுமிகளை சக மாணவி ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur | Karur

கரூர் மாயனூர் காவிரியாற்றில் 4 சிறுமிகள் பலியான நிலையில், 3 சிறுமிகளை ஆற்றில் குதித்து காப்பாற்றிய சக மாணவிக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த சுமார் 15 மாணவர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் விளையாட்டு போட்டியை முடித்து விட்டு புதுக்கோட்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையை சுற்றிப்பார்க்க இறங்கியுள்ளனர்.

அப்போது அதில் சில மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது அதில் ஒரு மாணவி ஆற்றில் இழுத்து செல்லப்பட்டுள்ளார். அதை பார்த்த மற்ற மாணவிகள் 6 பேர் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதனை கண்ட சக கால்பந்து வீராங்கனை கீர்த்தனா, ஆற்றில் பாய்ந்து குதித்து 3 சிறுமிகளை மீட்டு கரை சேர்த்தார். மேலும் 4 மாணவிகளை தேடி பார்த்த போது கிடைக்கவில்லை என தெரிகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைபுத்துறையினர் விரைந்து வந்து மாணவிகளை தீவிரமாக தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். மாணவி கீர்த்தனா நீரில் குதித்து காப்பாற்றவில்லை என்றால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கும். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு 3 உயிர்களை காப்பாற்றிய கீர்த்தனாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மூன்று பேர் காப்பாற்றப்பட்டாலும் 4 சிறுமிகள் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக இருந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்: கார்த்திக்கேயன், கரூர்.

First published:

Tags: Karur, Local News