ஹோம் /நியூஸ் /கரூர் /

குளித்தலை அருகே கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிலைகள் சேதம்... வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட 3 பேர் காயம்

குளித்தலை அருகே கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிலைகள் சேதம்... வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட 3 பேர் காயம்

கோவில் கோபுரம் சேதம்

கோவில் கோபுரம் சேதம்

குளித்தலை அருகே இடி தாக்கி விநாயகர் கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகள் இடிந்து விழுந்தது. கோவிலின் வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் காயம். கோவில் அருகே இருந்த அரச மரத்தில் இருந்த காக்கா, குருவி என 50க்கும் மேற்பட்ட பறவைகள்  இறந்துவிட்டன.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  குளித்தலை அருகே மின்னல் தாக்கி விநாயகர் கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகள் இடிந்து விழுந்தது. கோவிலின் வராண்டாவில் படுத்திருந்த பள்ளி மாணவன் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். கோவில் அருகே இருந்த அரச மரத்தில் இருந்த காக்கா, குருவி என 50க்கும் மேற்பட்ட பறவைகள்  இடி தாக்கியதில் உயிர் இழந்தன.

  கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட  புனவாசிப்பட்டி அருகே  வீரணம்பட்டியில் ஊரின் நடுப்பகுதியில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி அளவில் விநாயகர் கோவில் கோபுரத்தின் மீது மின்னல் விழுந்துள்ளது. அதில் கோபுரத்தில் இருந்த விநாயகர், நந்தி சிலைகள் இடிந்து விழுந்தது.

  மேலும் கோவில் வராண்டாவில் படுத்து இருந்த பள்ளி மாணவன் பிரசாத், கல்லூரி மாணவன் கவி மற்றும் ஐயப்பன் உட்பட 3 பேர் மீது நெருப்புகள் பட்டு காயம் ஏற்பட்டது. கோவிலில் இருந்த அரச மரத்தில் இருந்த  காக்கா, குருவிகள் என 50க்கும் மேற்பட்ட பறவைகளும் இடிதாக்கியதில் இறந்து விட்டது.

  கடந்த ஒரு வருடங்களுக்குள் இந்த சுற்றுவட்டார கிராம பகுதியில் மூன்று முறை மின்னல் விழுந்து தென்னை மரங்கள், பனை மரங்கள் சேதமடைத்துள்ளது. இந்நிலையில் வீடுகள் சூழ்ந்துள்ள பகுதிகள் நேற்று இரவு மின்னல் விழுந்ததில் அச்சமடைந்துள்ளதாகவும்,  மேலும் இப்பகுதிகளில் அரசு இடி தாங்கி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர்: கார்த்திகேயன் - கரூர்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Karur, Temple