ஹோம் /நியூஸ் /கரூர் /

லாரி ஓட்டுநர் கொலையில் சிக்கிய கஞ்சா போதை ஆசாமி - காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல்

லாரி ஓட்டுநர் கொலையில் சிக்கிய கஞ்சா போதை ஆசாமி - காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல்

கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரவீன்

கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரவீன்

Karur News : குளித்தலையில் லாரி டிரைவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் லாரி ஓட்டுநரை மீன் வெட்டும் கத்தியால்  வெட்டி கொலை செய்த கஞ்சா போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர்  முருகேசன் மகன் விக்னேஷ் (27) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் பிரவீன். இவர் கஞ்சா போதையில் மனம் போன போக்கில் தன்னை பெரிய ரவுடியாக காட்டிக்கொண்டு வலம் வந்துள்ளார். தற்போது பொங்கல் பண்டிகையொட்டி அப்பகுதியில் விளையாட்டுப் போட்டி விழா நடைபெற்று உள்ளது.

இந்த போட்டியினை விக்னேஷ் அவரது மற்றும் நண்பர்கள்  ஏற்பாடு செய்து நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த பிரவீன் அங்கு உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் தான் எவ்வளவு பெரிய ரவுடி தெரியுமா உங்களை சும்மா விட மாட்டேன் என்று கூறி வந்துள்ளார்.

இந்நிலையில்  விக்னேஷ் லாலாப்பேட்டை ஆண்டியப்பன் நகர் மைதானத்தில் தனது புல்லட் வாகனத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த பிரவீன் விக்னேஷின் கழுத்தில் மீன் வெட்டும் கத்தியால்  வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயங்களுடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் பரிதாபமாக உயரிழந்தார்.

விக்னேஷை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரவீனை லாலாபேட்டை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். குற்றவாளி திடீரென தொலைபேசியை ஆன் செய்து யாரிடமோ பேசிவிட்டு மீண்டும் ஆப் செய்துள்ளார். அந்த சிக்னலை வைத்து கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளித்தலை அருகே மருதூர் செக்போஸ்ட் பகுதியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தை போலீசார் மறித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை அங்கே போட்டுவிட்டு தப்பியோடிய பிரவீனை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன்

First published:

Tags: Crime News, Karur, Local News