முகப்பு /செய்தி /கரூர் / கரம் பிடித்த மூன்றரை அடி உயரம் கொண்ட தம்பதி.. மணமக்களை வாழ்த்திய மக்கள்! கரூரில் சுவாரஸ்யம்!

கரம் பிடித்த மூன்றரை அடி உயரம் கொண்ட தம்பதி.. மணமக்களை வாழ்த்திய மக்கள்! கரூரில் சுவாரஸ்யம்!

கரம் பிடித்த ஜோடிகள்

கரம் பிடித்த ஜோடிகள்

Karur marriage | கரூரில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மூன்றரை அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மணமக்களுக்கு உறவினர்கள் தலைமையில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, புதுக்குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (40). பி.காம் பட்டதாரியான இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மாற்றுத் திறனாளியான இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசித்து வருகிறார். சுமார் மூன்றரை அடி உயரம் கொண்ட இவரால் சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாமல் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், அதே உயரத்தில் உள்ள பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டார்.

அவரை பார்க்க சென்ற சசிக்குமாருக்கு சாந்தியை பிடித்துப் போக அவரிடம் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து ஒரே உயரம் கொண்ட இருவருக்கும், உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் திருமணம் விமர்ச்சையாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் அவர்களை வாழ்த்திச் சென்றனர். மேலும், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

First published:

Tags: Karur, Local News, Marriage