முகப்பு /செய்தி /கரூர் / குடியரசு தின விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்.. சர்ச்சையை தொடர்ந்து திரும்ப பெற்ற கரூர் மாவட்ட நிர்வாகம்

குடியரசு தின விழாவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்.. சர்ச்சையை தொடர்ந்து திரும்ப பெற்ற கரூர் மாவட்ட நிர்வாகம்

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்

Karur News : கரூரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

நாட்டின் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா நாட்களில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் அயராது பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவலாக டாஸ்மாக்கில் மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டியதற்காக மாவட்ட மேலாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் என 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவிலான பதிவுகள் வைரலாகியது. மாவட்ட மேலாளர், 2 மேற்பார்வையாளர்கள், ஒரு விற்பனையாளர் என 4 பேருக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழ் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Karur, Local News, Tamil News