முகப்பு /செய்தி /கரூர் / ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை : கரூரில் பயங்கரம்!

ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை : கரூரில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட அதிமுக வார்டு உறுப்பினர் வடிவேல்

கொலை செய்யப்பட்ட அதிமுக வார்டு உறுப்பினர் வடிவேல்

Karur Murder | கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூரில்  ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு தராததால் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (50) கரூர் மாநகராட்சி 32வது வார்டு அதிமுக வார்டு செயலாளராக உள்ளார்.

கடந்த ஓராண்டாக ராயனூரில் மனைவி, இரு மகன்கள் என குடும்பத்துடன் வசித்து வந்த வடிவேல், நேற்றிரவு கரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராயனூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ராயனூர் பகுதியில் ஒரே மோட்டா சைக்கிளில் வந்த 3 பேர் வடிவேலுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்த வடிவேலுவை மீட்டு கரூர் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம் பொய்கைப்புதூரை சேர்ந்தவர் மகாதேவன் (32) என்கிற  ஆட்டோதேவன். இவர் முத்துராஜபுரத்தில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். வடிவேல் முன்பு ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். வடிவேல் நேற்று காலை ரூ.5,000 கடன் கேட்பதற்கு மகாதேவனுக்கு போன் செய்துள்ளார்.  மகாதேவன் போனை எடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த வடிவேல் முத்துராஜபுரத்திற்கு நேரில் வந்துள்ளார். அப்போது அங்குள்ள டீக்கடையில் நின்றுக்  கொண்டிருந்த தேவனிடம் போன் செய்தால் எடுக்க மாட்டாயா? எனக்கூறி வாக்குவாதம் செய்து  தேவனை திட்டியுள்ளார். இதையடுத்த அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து  அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் டீக்கடையிலேயே செல்போனை மறந்துவிட்ட மகாதேவன் செல்போனை எடுப்பதற்காக மீண்டும்  டீக்கடைக்கு வந்துள்ளார். இதைப்பார்த்து மீண்டும் ஆவேசமடைந்த வடிவேலு மீண்டும் மகாதேவனை தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மீண்டும் இருவரையும்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் வடிவேலு இரவு அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதை அடுத்து  பசுபதிபாளையம் போலீஸார் மகாதேவன், அவர் தம்பி பாலா, அவரது நண்பர் சேகர் ஆகிய 3  பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர், தனது நண்பரிடம் 5,000 ரூபாய் பணம் கேட்டு தராததால் பொது இடத்தில் திட்டி தாக்கியதால், மன உளைச்சலில் ஆட்டோ டிரைவர், தம்பி மற்றும் சிலரை வைத்து நண்பரான அதிமுக பிரமுகரை வெட்டி கொலை செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : தி.கார்த்திகேயன்

First published:

Tags: Crime News, Karur, Local News