ஹோம் /நியூஸ் /கரூர் /

கரூர்: விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு.. கழிவுநீர் தொட்டியில் சாரம் அகற்றும் போது நேர்ந்த துயரம்!

கரூர்: விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு.. கழிவுநீர் தொட்டியில் சாரம் அகற்றும் போது நேர்ந்த துயரம்!

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

சாரம் அகற்றும் பணியில் ஈடுபட்ட போது ஒருவர் மயக்கமடைந்தார், அவரை காப்பாற்ற சென்ற மற்ற 2 பேரும் சேர்ந்து விஷ வாயு தாக்கியதில் மயக்கமடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur | Karur

  கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் சாரம் அகற்றும் போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கரூர் மாவட்டம், செல்லாண்டிபாளையம்  அடுத்து சுக்காலியூர் காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரது வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கிய தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன்ராஜ், கான்கிரீட் மர சாரம் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயக்கமடைந்துள்ளார்.

  மயக்கம் அடைந்த கட்டிட தொழிலாளி மோகன்ராஜை காப்பாற்ற தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவா மற்றும் ஜீவாவும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இதில் மூன்று பேரும் மயக்கமடைந்துள்ளனர்.

  இதனை கண்ட கட்டிட தொழிலாளர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையும் படிங்க | பழத்தோட்டத்தில் கிடைத்த 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம், நந்தி சிலைகள்.!

  அங்கு 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக பெய்த மழையால் இரண்டடி நீர் தேங்கி இருந்துள்ளது.

  தேங்கிய நீர் விஷ வாயுவாக மாறியதால், விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  தொடர்ந்து போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Death, Karur