முகப்பு /செய்தி /கரூர் / நோயாளிகள் உணவில் இரும்பு துண்டு.. கரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

நோயாளிகள் உணவில் இரும்பு துண்டு.. கரூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

உணவில் கிடந்த இரும்பு துண்டு

உணவில் கிடந்த இரும்பு துண்டு

Karur hospital food | கரூர் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் 7 மாடிகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur | Karur

கரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்காக வழங்கப்படும் வரும் உணவில் இரும்பு துண்டு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் 7 மாடிகளில் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினசரி 5,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளில் இலவசமாக சத்தான உணவு, பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் 3வது மாடியில் உள்ள பெண்கள் சிகிச்சை பிரிவில் வழங்கப்பட்ட மதிய உணவில் இரும்பு துண்டு ஒன்று கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தீயாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

First published:

Tags: Food, Govt hospitals, Karur, Local News