Home /News /karur /

சாதி பெயரை சொல்லி கொடுமை... திருமணம் செய்து பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய கணவர் - கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனைவி இரவில் தர்ணா

சாதி பெயரை சொல்லி கொடுமை... திருமணம் செய்து பிறகு சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய கணவர் - கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனைவி இரவில் தர்ணா

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

Karur : திருமணம் செய்து பிறகு ஜாதியை காரணம் காட்டி ஏமாற்றிய கணவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.

மேலும் படிக்கவும் ...
    காதலித்து திருமணம் செய்து இரண்டு மாதம்  குடும்பம் நடத்திய கணவர். பிறகு, தாழ்த்தப்பட்ட பெண் என தெரிந்ததும் கைவிட்டு சென்ற கணவர் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் உறவினர்களுடன் இரவு நேரத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் கரூரில் நர்சிங் படித்து வருகிறார். இவரை தரகம்பட்டி அருகே செவலூரை சேர்ந்த சசிகுமார் என்பவர் காதல் திருமணம் செய்து, கோவையில் உள்ள அவரது நண்பர்  வீட்டில் மூன்று மாதத்திற்கு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், சசிகுமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்களை அழைத்து வந்து கரூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பெண்ணை ஜாதி பெயரை சொல்லி கொடுமை படுத்தியுள்ளனர்.பெற்றோர்கள் மிரட்டியதால், தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என காரணம் காட்டி கணவர் சசிகுமாரும் கைவிட்டுவிட்டார்.

    சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குளித்தலை டிஎஸ்பி-ஸ்ரீதரிடம் எஸ்.பி அனுப்பி வைத்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் டி.எஸ்.பி .ஸ்ரீதர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கவும்,  திருமணம் செய்து பிறகு ஜாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதியக்கோரி நர்சிங் மாணவி ரேவதி தனது உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Must Read : கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளை அரசுடைமையாக்க வேண்டும் - இந்து முன்னணி மாநில தலைவர்

    இதனைத் தொடர்ந்து கரூர் சரக டி.எஸ்.பி. தேவராஜ் தலைமையிலான போலீசார் சசிகுமார் மீது உறுதியாக வழக்குப்பதிய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் களைந்து சென்றனர்.

    செய்தியாளர், தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Caste, Crime News, Karur

    அடுத்த செய்தி