முகப்பு /செய்தி /கரூர் / தமிழகம் வரும் ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் - அர்ஜுன் சம்பத்

தமிழகம் வரும் ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் - அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல தேவையில்லை ஆனால் தமிழ்நாடு முதலமைச்சராக வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும்

  • Last Updated :
  • Karur, India

செப்டம்பர் 7ஆம் தேதியன்று, தமிழ்நாட்டிற்கு வரும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து "RAHUL GO BACK" என முழக்கமிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாநகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இன்று அவற்றை நீர்நிலைகளில் கரைக்க செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கோவை சாலை, ஜவஹர் பஜார், 5 ரோடு வழியாக வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்க ஊர்வலமாக சென்றனர்.

இதில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஊர்வலத்தை தொடங்க்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் பொதுவானவர். திமுக தலைவராக இருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துச் சொல்ல தேவையில்லை ஆனால் தமிழ்நாடு முதலமைச்சராக வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். இந்துக்களை முதலமைச்சர் புறக்கணிக்கிறார்.  இது கண்டிக்கதக்கது எனவும் அவர் கூறினார்.

இதையும் வாசிக்க: ரூ.300 கோடி செலவிலான திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் - அமைச்சர் சேகர் பாபு

தொடர்ந்து பேசிய அவர், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்து தமிழ்நாட்டில் அரசு மாடல் பள்ளிக்களை திறக்க வைக்கின்றனர். டெல்லியில் அர்விந் கெஜ்ரிவால் மும்மொழி கொள்கை, நவோதயா பள்ளிகள், புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் இவை எதையும் அனுமதிப்பதில்லை எ.

பாரத் ஜோடோ யாத்ரா, என்ற காங்கிரஸின் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிகிறது. இதற்காக செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு ராகுல் காந்தி வருகை தர உள்ளார். இந்நிலையில், அவர் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார் எனவும் ராகுல் காந்தி பொதுமக்களை ஏமாற்ற இங்கு வருகை தருகிறார் எனவும்  அர்ஜுன் சம்பத் விமர்சித்தார். ராகுல் கோபேக் என்ற முழக்கத்துடன் வரும் 7ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

top videos

    - கார்த்திகேயன், செய்தியாளர்

    First published:

    Tags: Arjun Sampath, CM MK Stalin, Rahul gandhi