இந்து கோவில்களின் சொத்தை நிர்வாகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடமையாக்கியது போல் கிறிஸ்தவர்களின் ஆலயங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதிகளை அரசுடமையாக்க வேண்டும் என திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கூறினார்.
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் பிரச்சார பயணம் கடந்த மாதம் 28ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்கியது அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விட்டு இந்த பிரச்சார பயணம் நேற்று திருப்பூர் வந்தடைந்தது.
இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் கடந்த ஜூன் 28ஆம் தேதி திருச்சந்தூரில் துவங்கியது. 17 வது நாளாக திருப்பூர் வந்துள்ளோம். இங்கு இந்த பிரச்சாரம் குறித்த பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் துவங்கிய நாள் முதலே அனைத்து மாவட்டங்களிலும் அமோக வரவேற்பு உள்ளது.
இந்துக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செல்லும் இடங்களிலும் மக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர். இந்து கோவில்களின் உரிமை மீட்கப்பட்ட வேண்டும். இந்து கோவில்களின் சொத்துக்களில் வரும் வருமானங்களை அரசு எடுத்துக் கொள்கிறது. ஆனால் கிறிஸ்தவ ஆலயங்கள் முஸ்லிம்களின் மசூதிகளில் வரும் வருமானங்களை அவர்களின் தனி அமைப்புகள் நிர்வாகிக்கிறது.
எனவே இந்து கோவில்களின் சொத்தை நிர்வாகிப்பதற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் இந்து கோவில்களை அரசுடமையாக்கியது போல் கிறிஸ்தவர்களின் ஆலயங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதிகளை அரசுடமையாக்க வேண்டும். பள்ளிகளில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைகள் இந்து மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அரசு பள்ளிகளில் இந்து மாணவர்களின் உதவித்தொகை பறிக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் இந்து கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதனை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. அதனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரிடம் வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே அரசு உடனடியாக இந்து கோவில்களில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க வேண்டும்.
போலி பாஸ்போர்ட் தயாரிப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக அரசு கைது செய்ய வேண்டும். இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தில் பல்வேறு இடர்பாடுகள் இடைஞ்சல்களை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் இந்த பயணம் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
Must Read : இபிஎஸ், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் பதிலடி அறிவிப்பு
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பள்ளிவாசலை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அதனை செயல்படுத்த அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர். திருப்பூரில் நடந்த சம்பவத்தில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக காவல் துறையும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் செயல்பட்டு உள்ளனர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Munnani, Karur