கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள பழைய இரும்பு கடை குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனசரக துறையினர் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவர் தனது வீட்டின் தரை தளத்தில் பழைய இரும்பு கடை பொருட்கள் வாங்கும் கடையினை குடோனுடன் நடத்தி வருகிறார். இந்த பழைய இரும்பு குடோனில் செம்மரக்கட்டை பதுக்கி வைத்திருப்பதாக குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் கரூர் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் கரூர் மாவட்ட வன சரகர் சரவணன் உத்தரவின்பேரில் வன அலுவலர் தண்டபாணி தலைமையில், வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை தெப்பக்குளம் தெருவில் உள்ள பழைய இரும்பு கடை குடோனில் இருந்து 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்த செல்ல பாண்டியனை கைது செய்தனர். பின்னர் அவரை குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மணப்பாறை கிளை சிறையில் அடைத்தனர்.
பழைய இரும்பு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் பல மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டு இருக்கலாம் என்றும் இது சுமார் ஒரு டன் இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: தி. கார்த்திகேயன், கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, Karur, Kulithalai Constituency, Local News