Home /News /karur /

குளித்தலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

குளித்தலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

குளித்தலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

குளித்தலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...

Karur | குளித்தலையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட  அதிமுக பிரமுகரும், கல்லூரி முதல்வரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவல்லி ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார்.

    அச்சிறுமி அவரது ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில், கல்லூரி விடுதியில் பணியில் இருந்து வரும் அமுதவல்லி, சமையலர் ஆக வேலை பார்த்து வரும் மணப்பாறையை சேர்ந்த மகாலட்சுமி  ஆகிய இருவரும் செந்தில்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்தால் உனது படிப்பு சான்றிதழை வழங்க மாட்டோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

    அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கரூர் மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை மகளிர் போலீசார் விசாரணை செய்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வழக்கறிஞரான செந்தில்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து முன்கூட்டியே அறிந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் அமுதவல்லி, மகாலட்சுமி ஆகிய மூவரும் தலைமறைவாகிவிட்டனர்.  இதில் விடுதி சமையலர் மகாலட்சுமியை கடந்த மே 27ஆம் தேதி போலீசார் மணப்பாறையில் வைத்து கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பாளர் அமுதவள்ளியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஜூலை 16ம் தேதி இரவு மேல்மருவத்தூரில் தங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்து குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Also see... பெண் மீது போலீஸ் எஸ்.ஐ தாக்குதல்.. காவல் நிலையத்தில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ

    இந்நிலையில்  கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் விடுதி காப்பர் அமுதவல்லி ஆகிய இருவரும் மீதும் மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி