Home /News /karur /

குளித்தலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...

குளித்தலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...

பலியல் தொல்லை கொடுத்த அரசி பள்ளி ஆசிரியர்

பலியல் தொல்லை கொடுத்த அரசி பள்ளி ஆசிரியர்

Karur | குளித்தலை அருகே பொம்மாநாயக்கன்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளை அடித்தும், தகாத வார்த்தையால் திட்டியும், பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மருதை (59) என்பவரை குளித்தலை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக  மருதை (59) பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகாதவர். அந்தப்பள்ளியில் 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவ, மாணவிகளை அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் தொந்தரவு  செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்ற ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை செய்து  குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் செய்துள்ளார்.

Also see...அமைச்சர் பிடிஆரை சந்திக்க அன்பில் மகேஷ் திட்டம்...

அதன்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர், தி.கார்த்திகேயன்,கரூர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Karur, Kulithalai Constituency, Sexual harassment, Teacher

அடுத்த செய்தி