Home /News /karur /

கரூரில் களைகட்டிய ஆட்டு சந்தை... ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு விற்பனை

கரூரில் களைகட்டிய ஆட்டு சந்தை... ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு விற்பனை

கரூர் ஆட்டுச்சந்தை

கரூர் ஆட்டுச்சந்தை

Karur | கரூர் அருகே களைகட்டி ஆட்டு சந்தையில் நேற்று மட்டும் 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டு சந்தையில் சுற்று வட்டார பகுதிகளான அரவக்குறிச்சி, தென்னிலை, க.பரமத்தி, சின்னதாராபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் வருவது வழக்கம்.

    இவர்கள் தங்களது கூடுதல் வருமானத்திற்காக ஆடுகளை வளர்த்து விற்பனைக்காக இந்த வாரச் சந்தைக்கு கொண்டு வருவார்கள்.
    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, முன் அனுமதி பெற்று  இரண்டு நாட்களுக்கு ஆட்டுச் சந்தையில் செம்மரி ஆடு, வெள்ளாடு, கொடியாடுகள் உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

    இந்த வார சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வியாபாரிகள் அதிகாலை முதலே தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி சென்றனர்.
    வாரச் சந்தைக்கு 3 ,000க்கும் மேல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

    ஒரு ஆட்டின் விலை சுமார் 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையில் விற்பனையானது.  நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cow Market, Farmers, Karur

    அடுத்த செய்தி