ஹோம் /நியூஸ் /கரூர் /

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார் - தனியரசு

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை அழிக்க நினைக்கிறார் - தனியரசு

தனியரசு

தனியரசு

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இணைந்து செயல்பட விரும்புவதால் அவர்களுக்கு ஆதரவளிக்கிறேன் - தனியரசு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  கூட்டத்திற்கு பின்னர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டை கொண்டு வந்தார் எடப்பாடி. பழனிசாமி.

  தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும்  ஆதரவளிக்கிறேன்.

  மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார். அதனால் அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன்” என்று தனியரசு பேசினார்.

  அமைச்சர் பொன்முடி, இலவசமாக பேருந்தில் பெண்கள் செல்வதை வட்டார மொழியில் ஓசியில்  செல்கிறார்கள் என பேசியது தவறில்லை. தமிழகத்தின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. ஒன்று இரண்டு தவறுகள் நடந்தாலும் அதை சுட்டிக் காட்டினால் தமிழக அரசு திருத்திக் கொள்கிறது.

  Also see... மாணவியை மருமகளே என அழைத்த ஆசிரியை பணியிட மாற்றம்..

  மேலும் தமிழகத்தில் இரட்டை நிர்வாகத்தை கொண்டுவர தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி முயற்சிக்கிறார். அரசியல் பேசுகிறார். இதை கண்டித்து ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: EPS, Karur, Thaniyarasu