முகப்பு /செய்தி /கரூர் / பாஜக, எடப்பாடி அணிக்கு இரவு 12 மணி வரை தான் கெடு.. ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்

பாஜக, எடப்பாடி அணிக்கு இரவு 12 மணி வரை தான் கெடு.. ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்

ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்

ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்

Erode East By-Election | ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள் ஒரு காலத்திலும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம் என கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

பாஜகவும், எடப்பாடி அணியினரும் அவர்களது நிலைப்பாடு என்ன என்பதைக் கூற இன்று இரவு 12 மணி வரை கெடு விதித்துள்ளதாக கரூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன்,இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு எடப்பாடி அணியினர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓபிஎஸ் அவர்களை கையெழுத்து போட அனுமதித்தால் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என கூறினார்.இன்று இரவு 12 மணி வரை அதற்கான கெடு விதித்துள்ளோம் என பேசிய கிருஷ்ணன் ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை கைப்பற்ற நினைத்தால் ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி அணியினருக்கு நல்ல பாடத்தை கற்றுத் தருவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாங்கள் அனைவரும் எம்.ஜி.ஆருடன் பயணித்தவர்கள் ஒரு காலத்திலும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம். ஈபிஎஸ் எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை என்றார். பாஜக எங்களை இயக்க நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை. யாருடைய தயவும் எங்களுக்கு தேவையில்லை என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்போம் என பேசிய அவர் பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தோம். பாஜக எங்களிடம் கேட்டுக் கொண்டால், அவர்கள் தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆதரவு தருவோம் என கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்

செய்தியாளர்: தி.கார்த்திகேயன்

First published:

Tags: ADMK, Karur, Local News, OPS, OPS - EPS