Home /News /karur /

கல்குவாரியை எதிர்த்ததால் கொல்லப்பட்ட விவசாயி: உரிய இழப்பீடு தர சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வலியுறுத்தல்

கல்குவாரியை எதிர்த்ததால் கொல்லப்பட்ட விவசாயி: உரிய இழப்பீடு தர சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன்

Karur | தமிழக அரசு உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் நீங்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Karur, India
    சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியை எதிர்த்த விவசாயி ஜெகன்நாதன்  வாகனம் ஏற்றி கொல்லபப்ட்ட சம்பவத்தில், விவசாயியின்   உடலை வாங்க மறுத்து நான்கு நாட்களாக குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முகிலன் மற்றும் சண்முகத்தை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

    பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில் பசுபதிபாளையம் காவல் நிலையத்திலிருந்து தனிநபர் ஜாமினில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேசிகையில், “ தமிழக பொது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிமுக அரசின் அடக்குமுறை குறித்து பேசுகையில் என்னைப் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களை சிறையில் தள்ளி ஒடுக்குமுறையில் ஈடுபடுவதாக பேசினார்.

    கடந்த அரசை தமிழக மக்கள் தூக்கி எறிந்ததைப் போல சமூக ஆர்வலர்களை ஒடுக்கினால் இவர்களையும் மக்கள் தூக்கி எறிவார்கள். கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்தாருக்கு உரிய நீதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை கரூர் மாவட்ட ஆட்சியர் பரிசீலைப்பதாக கூறினார்.

    பின்னர், அவசர அவசரமாக தன்னை கைது செய்து சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, குளித்தலை ஆகிய காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று, காவல் ஆய்வாளர் ஒறுமையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக தகாத வார்த்தையில் பேசினார்.

    Also see...பெயிண்ட் அடிக்க வந்த இடத்தில் ரூ.10 லட்சம் திருட்டு: 3 பேர் கைது

    இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளேன். தமிழக அரசு உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் நீங்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து பாதுகாப்பு வழங்க முன்வர வேண்டும்”  என இவ்வாறு முகிலன் தெரிவித்தார்.

    செய்தியாளர்: கார்த்திகேயன், கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Farmer, Karur, Murder case, Quarry

    அடுத்த செய்தி