Home /News /karur /

4 இடத்தில் கொடியேற்றிய திமுக ஒன்றியக் குழு தலைவர்... பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஆத்திரம்

4 இடத்தில் கொடியேற்றிய திமுக ஒன்றியக் குழு தலைவர்... பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஆத்திரம்

தேசிய கொடியை அவமதித்த திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்

தேசிய கொடியை அவமதித்த திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்

அரசு பள்ளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து தேசிய கோடியை அவமதிக்கும் வகையில் திமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கொடியேற்றியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கரூர் மாவட்டம் தரகம்பட்டி தாலுக்காவில் திமுக ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் 4 இடங்களில் கொடியேற்றி 2 மணி நேரம் தாமதமாக வருகை தந்ததால் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் தரகம்பட்டி தாலுக்கா உட்பட்ட இரண்டு அரசு பள்ளி, ஒரு அரசு கலைக்கல்லூரி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட 4 இடத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கொடியேற்றி வைத்துள்ளார்.

    பாலவிடுதி அரசு பள்ளியில் கொடி ஏற்றும் போது மாணவர்கள் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து கொண்டும் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும் விதமாக கொடி ஏற்றியுள்ளார்.

    ALSO READ | திருப்பத்தூரில் கஞ்சா போதையில் சிறுவன் ரகளை! மரத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்!

    மேலும் தரகம்பட்டி மாதிரி பள்ளியில் கொடியேற்ற ஒன்றிய பெருந்தலைவர் இரண்டு மணி நேரம் கால தாமதமாக வந்துள்ளார். இதனால் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆவேசமடைந்து அரசு பள்ளி நிர்வாகத்திடம் முறை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    அந்த வீடியோ, புகைப்படம் தற்போது கரூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Karur

    அடுத்த செய்தி