Home /News /karur /

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை திமுக பிரமுகர் இடித்து இடத்தை ஆக்கிரமித்ததாக புகார்.. கரூரில் பரபரப்பு

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை திமுக பிரமுகர் இடித்து இடத்தை ஆக்கிரமித்ததாக புகார்.. கரூரில் பரபரப்பு

 போராட்டத்தில் மக்கள்

போராட்டத்தில் மக்கள்

Karur District: கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை திமுக பிரமுகர் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்.

    கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை திமுக-வை சேர்ந்த நபர் ஒருவர் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    கரூர் மாவட்டம், மேலப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வடக்குபாளையம் கிராமத்தில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1996 - 2001ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள்  பயன்படுத்தி வந்தனர்.

    நிழற்குடையின் பின்புறம் திமுக தாந்தோணி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமூர்த்தி என்பவரரின் வீடு அமைந்துள்ளது.
    மேலும், பேருந்து நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் காலி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், பேருந்து நிழற்குடை இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி, இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் கொண்டு நிழற்குடையை தரைமட்டமாக இடித்து அகற்றி இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்குபாளையம் பகுதி கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த போராட்டத்தின் போது கரூர் மாநகர டிஎஸ்பி தேவராஜ், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட வந்தனர். அப்போது கிராம மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Must Read : எனது தற்கொலைக்கு போலீசார் தான் காரணம்.. மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..

    இதனை தொடர்ந்து மீண்டும் பேருந்து நிழற்டையை புதிதாக அமைத்து தருவதாக கரூர் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால், அங்கே பரபரப்பு நிலவியது.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMK, Karur, Protest

    அடுத்த செய்தி