ஹோம் /நியூஸ் /கரூர் /

’பில்லு இன்னும் வரல’.. வாட்ச்.. வடிவேலு.. கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

’பில்லு இன்னும் வரல’.. வாட்ச்.. வடிவேலு.. கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

அண்ணாமலையை எதிர்த்து கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

அண்ணாமலையை எதிர்த்து கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

மேலும், இந்த வாட்ச் வைத்து 25 எம்பிக்களை பெற்று விட முடியும் என கோவையில் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

‘தம்பி மல பில்லு இன்னும் வரல’ என கரூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கான ரசீது கேட்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், பல்வேறு அரசியல் வாதிகளும், வலைத்தளவாசிகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க :  “விசிகவில் 80% ஹிந்துக்கள்தான்.. பாஜகவுடன் கூட்டணி வைக்க விசிக தயங்காது..” - திருமாவளவன் பரபரப்பு பேச்சு

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும், இந்த வாட்ச் வைத்து 25 எம்பிக்களை பெற்று விட முடியும் என கோவையில் அவர் பேசியதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் திமுகவினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  அதில் தம்பி மல.. பில்லு இன்னும்  வரல என்ற வாசகமும் அருகில் வாட்ச் படமும் அதில் வடிவேலு படமும் இடம்பெற்றுள்ளது.

செய்தியாளர் : கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Annamalai, Karur, Poster, Senthil Balaji