கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டுயிடுவதைத் தடுக்கும் நோக்கில், திமுக-வினர் தன்னை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியதாக அதிமுக வேட்பாளர் திருவிக குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஏற்கனவே இந்த தேர்தல் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர், அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆறு பேர் என சம பலத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.வி.க தேர்தலை முறையாக நடத்த கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தலை முறையாக நடத்தவும், தேர்தல் அதிகாரி சீல் இடப்பட்ட கவரில் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கோர்ட் உத்தரவிடும் வரை முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் அதிமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் முன்னாள் அமைச்சர் காரை தடுத்து நிறுத்தி, கண்ணாடியை உடைத்து அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேட்பாளர் திருவிக என்பவரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் ஒன்று கூடினர். எதிர் தரப்பில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மாறி மாறி செருப்புகள், கற்கள், வாட்டர் பாட்டில் வீசிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் இரு தரப்பினரையும் தனித்தனியாக தடுத்து நிறுத்தி பாதுகாப்புக்காக போலீசாரை குவித்தனர்.
இந்த நிலையில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் கோர்ட் உத்தரவுப்படி நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த ஆறு பேர், அதிமுகவை சேர்ந்த ஐந்து பேர் பங்கு பெற்று வாக்களித்தனர்.
Also see... ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் சிஎம்
கோர்ட் உத்தரவுப்படி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
தேர்தல் நடந்து முடிந்து திமுக உறுப்பினர்கள் ஆறு பேர் வெளியே வந்தனர். இதில் திமுக சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 5-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி செய்தியாளர்களை சந்தித்து தனக்கு 7 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றதாகவும், அதிமுக தரப்பிற்கு 4 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்தார்.
செய்தியாளர், தி.கார்த்திகேயன்,கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Karur, Local News