கரூர் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் பள்ளியில் இருந்து இடை நின்ற சுமார் 2,000 மாணவ, மாணவிகள் உள்ளனர். “பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீண்டும் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார்.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலை ஊராட்சி வாளியம்பட்டி கிராமத்தில் மட்டும் இடைநின்ற சுமார் 26 பள்ளி மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அந்த ஊர் பெரியவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அந்த பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் என்றும் தங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல்லை எனவும் தெரிவித்தனர். ஊர் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த வழித்தடங்களில் புதிய பேருந்து இயக்கப்பட்டது.
அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகள் எளிதாக பள்ளிக்கூடம் சென்று வர வசதியாக, புதிய வழிதடத்தில் பேருந்தினை துவக்கி வைத்து அந்தப் பேருந்திலேயே பள்ளி மாணவ மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பயணம் செய்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பேருந்தில் இருந்து இறங்கி பள்ளிக்கு வந்த இடைநின்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ரோஜாப்பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், பள்ளி வகுப்பறைக்குள் சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் அவர்களின் பெயர்கள் மற்றும் படித்து முடித்து என்ன ஆவீர்கள் என ஒவ்வொருவரிடமும் கேட்டார். அப்போது மாணவர்கள் கலெக்டர், போலீஸ், மருத்துவர், ஆசிரியர் என ஆர்வத்துடன் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆட்சியர் கைதட்டி உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தார்.
Must Read : ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா… நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் சுமார் 2,000 பள்ளி மாணவ மாணவிகள் இடை நின்றுள்ளதாகவும், முதற்கட்டமாக ஆர்.டி.மலை ஊராட்சி வாளியம்பட்டியில் 26 பள்ளி மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், மாவட்ட முழுவதும் இடைநின்ற பள்ளி மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தரும் என்றும் கூறினார்.
செய்தியாளர் - தி.கார்த்திகேயன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karur, School students