ஹோம் /நியூஸ் /கரூர் /

ஆற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.. கரூர் அருகே சோகம்.!

ஆற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.. கரூர் அருகே சோகம்.!

உயிரிழந்த மாணவன்

உயிரிழந்த மாணவன்

Karur News : அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி மாணவன் நங்காஞ்சி ஆற்றில் குளிக்க சென்றபோது உயிரிழப்பு!

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ரெங்கப்ப கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (19). இவர் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.

இந்நிலையில், தனது உறவினர்களான அசோக்குமார்(17), சதீஷ்குமார்(32), பிரகாஷ்(27) ஆகியோருடன் இன்று மாலை 5 மணி அளவில் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள நங்காஞ்சி ஆற்று தடுப்பணையில் வழிந்து ஓடும் ஆற்று நீரில் குளிக்க சென்றுள்ளார்.  அப்போது தடுப்பணையில் தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 1.30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மாணவனின் சடலத்தை மீட்டனர்.

இதையும் படிங்க : சுத்தியலால் அடித்து திருநங்கை கொலை... லாரி ஆசாமிகள் வெறிச்செயல்... நெல்லையில் பரபரப்பு!

இதைத்தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : கார்த்திகேயன் - கரூர்

First published:

Tags: Karur, Local News