ஹோம் /நியூஸ் /கரூர் /

சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் கரூர் செங்கல் சூளையில் மீட்பு.. ஷாக் சம்பவம்!

சத்தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகள் கரூர் செங்கல் சூளையில் மீட்பு.. ஷாக் சம்பவம்!

சத்தீஸ்கரில் காணமல் போன 3 சிறுமிகள் கரூரில் மீட்பு

சத்தீஸ்கரில் காணமல் போன 3 சிறுமிகள் கரூரில் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் காணாமல் போன மூன்று சிறுமிகளை அம்மாநில தனிபடையினர் கரூரில் உள்ள செங்கல் சூளையில் மீட்டனர். அதே மாநிலத்தை சேர்ந்த 11 பேர்கள், குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தவர்களையும் மீட்டதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Karur, India

  சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல்துறை, மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.

  புகாரை தொடர்ந்து நாராயண்பூர் ஆட்சியர், அம்மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை குழந்தைகள் நல அலுவலர் சரிதா மற்றும் காவல் ஆய்வாளர் உத்தம் காவுடே தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

  இந்நிலையில், 3 சிறுமிகளும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், கரூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

  இதனிடையே, கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியம் பகுதி செங்கல் சூளையில் வெளிமாநில இளம்பெண்கள் வேலை செய்து வருவது தெரியவந்தது.

  சத்தீஸ்கர் மாநில அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகளும் சேர்ந்து செங்கல் சூளையில் சோதனை நடத்தியபோது, அதிர்ச்சி காத்திருந்தது.

  குறிப்பிட்ட 3 சிறுமிகளுடன், அங்கு, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 14 பேர்களில் 11 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாகவும், மூன்று ஆண்கள் கொத்தடிமைகளாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

  Also see... சபரிமலைக்கு ஐயப்பனை காண செல்லும் சிறுவர், சிறுமியர்...

  மீட்கப்பட்ட 14 பேரும் கரூரில் உள்ள அன்பு கரங்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்கல் சூளை நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chhattisgarh, Child Labour, Karur