Home /News /karur /

கரூர் அருகே 6 ஆண்டுக்குப் பிறகு நடந்த எருது ஓட்டம்... சீறிப்பாய்ந்த நாட்டு மாடுகள்!

கரூர் அருகே 6 ஆண்டுக்குப் பிறகு நடந்த எருது ஓட்டம்... சீறிப்பாய்ந்த நாட்டு மாடுகள்!

எருது ஓட்டம்

எருது ஓட்டம்

Karur District : கரூர் அருகே 6 ஆண்டுக்கு பிறகு எருது ஓட்டம் எனும் மாடு மாலை தாண்டும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது 300க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன.

    கரூர் அருகே 6 ஆண்டுக்குப் பிறகு எருது ஓட்டம் எனும் மாடு மாலை தாண்டும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில், 300க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகள் பங்கேற்றன. இந்த விழாவில் கரூர் திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட  மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சி பொம்மநாயக்கனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், முத்தாலம்மன், பொம்ம தேவர் ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா மற்றும் மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்த குல தெய்வ கோவில் திருவிழா 2 நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் துவங்கியது.

    அதனைத் தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான எருது ஓட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதில், கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல்,  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டு இன காளை மாடுகளை அந்தந்த ஊர்காரர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    சாமி வழிபாட்டிற்குப் பிறகு எருதுகளை சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச் சென்று அங்கிருந்து எருதுகளை ஓட்டி வந்தனர். 14 ஊர் மந்தை எனப்படும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்காக பாரம்பரியமாக வம்சாவழியாக தொடர்ந்து இந்த திருவிழாவை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

    Must Read : இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!

    இந்த எருது ஓட்ட விழாவில் பங்கேற்று முதலாவதாக வரும் 3 காளைகளுக்கு வெற்றிக்கனி எனப்படும் எலுமிச்சை பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bull, Festival, Karur

    அடுத்த செய்தி