முகப்பு /செய்தி /கரூர் / கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

 சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

Karur | கரூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டம், பாகநத்தத்தை அடுத்து அவுத்திபாளையம் கிராமத்தை சார்ந்தவர் சரவணன். இவருக்கு இளமுருகன் (வயது 8) என்ற மகனும், ஓவியா (வயது 14) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு பள்ளி விடுமுறை என்பதால் மூக்கணாங்குறிச்சி கிராமத்தை அடுத்த தம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவர்களது பெரியம்மா மணி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நேற்று மதியம் பெரியம்மா மணி, இளமுருகனையும், ஓவியாவையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுப்பிரமணி என்பவரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிச்சல் பழகி கொண்டிருந்தனர். அப்போது உடன் இருந்த இளமுருகன் தவறி 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்தார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், சிறுவனை மீட்க முடியாததால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுவனின் உடலை மீட்டனர்.

Also see.. திருப்பதி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள் விழா: இன்று சக்கர ஸ்நானம்

உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்

First published:

Tags: Crime News, Dead, Health, Karur