ஹோம் /நியூஸ் /கரூர் /

பாஜக போராட்டத்துக்கு அனுமதியில்லை.. பொய் வழக்கு போடுகிறார்கள் - அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக போராட்டத்துக்கு அனுமதியில்லை.. பொய் வழக்கு போடுகிறார்கள் - அண்ணாமலை குற்றச்சாட்டு

வழக்கறிஞர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை

வழக்கறிஞர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை

Karur Bjp Lawyers Meeting | கரூர் மாவட்ட பாஜகவினர் மீது போலீசார் தரப்பில் பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூர் மாவட்டத்தில் பாஜகவினர் மீது பதியப்படும் பொய் வழக்குகள் குறித்து விவாதிப்பதற்கு வழக்கறிஞர் அணியுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.

கரூர் மாநகரில் உள்ள தனியார் விடுதியில் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார் அவருக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மட்டும் பாஜகவினரின் எந்த விதமான போராட்டத்திற்கும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்து போராடினாலே கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து கரூர் மாவட்ட பாஜகவினர் மீது போலீசார் தரப்பில் பல்வேறு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டிய அண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை பற்றியும், வருங்காலங்களில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும், வழக்கறிஞர் அணியுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரத்யேகமாக இந்த கூட்டம் மாவட்ட பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேசினார்.

வழக்கறிஞர் அணியுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்றும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர்: கார்த்திகேயன் (கரூர்)

First published:

Tags: Annamalai, BJP, Karur, Local News, Tamil News