Home /News /karur /

கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினருக்கு ஆதரவாக திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...

கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினருக்கு ஆதரவாக திமுகவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்...

பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக ஆர்ப்பாட்டம்

Karur | கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி உறுப்பினருக்கு ஆதரவாக திமுகவை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கலா ராணி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்தவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமையின் சார்பில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை அடுத்து திமுக வேட்பாளர் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை திமுக தலைமை சார்பில் தலைவர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி தேர்வு செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக திமுகவை கண்டித்தும், புலியூர் பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ளதாக திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புலியூர் 4 ரோடு பகுதியில் நடைபெற்றது.

    Also see... தாம்பரம் அருகே பாரில் வெடிகுண்டு வீசிய நபர்

    தாந்தோணி கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
    இதில் புலியூர் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,கரூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, DMK, Karur, Protest

    அடுத்த செய்தி