Home /News /karur /

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய அரவக்குறிச்சி தாசில்தார்

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய அரவக்குறிச்சி தாசில்தார்

அரவக்குறிச்சி தாசில்தார் கைது

அரவக்குறிச்சி தாசில்தார் கைது

Karur : வாரிசு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற அரவக்குறிச்சி  தாசில்தார் ராஜசேகரன் மற்றும் ஓட்டுநர் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தந்தை சாமியப்பன் இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக பதிவு செய்திருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்காமல் அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகரன் வேண்டுமென்று நாள் கடத்தி வந்துள்ளார்.

    இதுகுறித்து பழனிச்சாமி, தாசில்தாரிடம் நேரில் சென்று வாரிசு சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது, 10,000 ரூபாய் கொடுங்கள் உடனடியாக வாரிசுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிசாமி கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்பேரில், டிஎஸ்பி நடராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் ராஜசேகரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் போது, கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது வாகன ஓட்டுனர் சுரேந்திரன் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    Must Read : சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூக்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

    இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இது போல வேறு யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Bribe, Crime News, Karur

    அடுத்த செய்தி