Home /News /karur /

அமைச்சர் செந்தில்பாலாஜி 2 மாதத்தில் ₹ 260 கோடி கமிஷன் பெற்றுள்ளார் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில்பாலாஜி 2 மாதத்தில் ₹ 260 கோடி கமிஷன் பெற்றுள்ளார் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

TN BJP Leader Annamalai : தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இடத்திலும், அமைச்சர் செந்தில்பாலாஜி அடுத்த இடத்தில் உள்ளனர். கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு  செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார் - பாஜக தலைவர் அண்ணாமலை

மேலும் படிக்கவும் ...
    கடந்த மே, ஜூன் என 2 மாதங்களில் 4,600 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததில் 4 சதவீதம் கமிஷன் தொகையாக சுமார் ₹ 260 கோடி கமிஷன் பெற்றுள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று கரூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்ப்பில் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றி  பேசினார்.

    அப்போது,  “மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த கடிதம் எழுதியுள்ளதாக செந்தில்பாலாஜி கூறுகிறார். அந்த கடிதத்தை செந்தில்பாலாஜி காட்ட வேண்டும். கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு  செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார்.  மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20 சதவிகித கமிஷன் பெறுகிறார்கள்.

    தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லக் கூடிய அமைச்சராக முதலமைச்சர் முதல் இடத்திலும், அடுத்த இடத்தில் செந்தில்பாலாஜி உள்ளார்.  தமிழகத்தில் மின் உற்பத்தி திறனை அரசு குறைத்து, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுகிறார்கள். மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் 4,600 கோடிக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷனாக 260 கோடி பெற்றுள்ளார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கரூரில் பாஜக ஆர்ப்பாட்டம்


    500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 54 சதவிகிதம் கட்டணம் உயருகிறது. மின் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்கிறார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ₹ 492 கோடிக்கு நிலக்கரி தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளது.

    Must Read : கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை

    பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழகத்தில் இருக்க கூடாது.  5 கட்சிக்கு சென்ற செந்தில்பாலாஜி 6-வது கட்சிக்கு செல்வதற்கு முன் ஊழல் வழக்கில் சிறை செல்லும் நிலை ஏற்படும் என்று அண்ணாமலை கூறினார்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, EB Bill, Karur, Senthil Balaji

    அடுத்த செய்தி