ஹோம் /நியூஸ் /Karur /

பாஜகவும், காங்கிரசும் மேகதாது அணை பிரச்சனையை தூண்டி விடுகின்றன - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாஜகவும், காங்கிரசும் மேகதாது அணை பிரச்சனையை தூண்டி விடுகின்றன - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி ஆற்றில் மணல் எடுப்பது தாயை மானபங்கம் செய்வதற்கு சமம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரசும் மேகதாது அணை பிரச்சினையை தூண்டி விடுகின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,  வருகின்ற 17ஆம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா அரசு அவர்களுக்கு அனுப்பி வைத்த மேகேதாட்டு அணை சம்பந்தமன திட்ட அறிக்கையை விவாதிக்க இக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

  இது சட்டத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழக நலனுக்கு எதிரானது. இந்த கூட்டம் நடைபெறக்கூடாது. அப்படி நடைபெற்றாலும், மேகேதாட்டு பிரச்சனையை அதில் விவாதிக்கக்கூடாது. இது சம்பந்தமாக தமிழக அரசிடம் 5 நாட்களுக்கு முன் அறிக்கை மூலம் ராமதாஸ் தெரிவித்தார். தமிழக அரசு இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய தீர்மானித்தனர்.

  காவிரி நீர் மேலாண்மை ஆணையர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை  உடனடியாக மாற்றவேண்டும். மேகேதாட்டு அணை என்பது சட்டத்திற்கு எதிரான ஒரு அணை. தமிழகத்திற்கு எதிரான ஒரு அணை. இந்த அணை கட்டினால் 70 டிஎம்சி கொண்ட அணையாக அது இருக்கும். தற்போது கர்நாடகாவுக்கு காவிரி படுகையில் 140 டிஎம்சி கொண்ட அணைகள் உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் 210 டிஎம்சியாக கொள்ளவு கொண்ட அணைகள் இருக்கும்.

  தமிழ்நாட்டில் 93 டிஎம்சி கொண்ட ஒரே அணை மேட்டூர் அணைதான். அதிலும் நமக்கு உபரி நீர் மட்டுமே வருகிறது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இதனை தூண்டிவிட்டு கொண்டு இருக்கின்றன. அனுமதி இல்லாமல் அணை கட்ட கர்நாடக சட்டப்பேரவையில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கின்றோம். அணை கட்டக்கூடாது. மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது. மத்திய நீர்வள அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் சூழ்நிலை உள்ளது. மேகேதாட்டு அணை வராது. வரவிடமாட்டோம்.

  காவிரி ஆற்றில் மணல் எடுக்கின்ற திட்டம் அரசுக்கு இருக்கிறது என தெரிகிறது. ஒரு காலத்தில் 48 மணல் குவாரி இருந்தது. தற்போது 4 குவாரிகள் மட்டும் இருக்கின்றன. இதனை  நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். காவிரி ஆற்றில் மணல் எடுப்பது தாயை மானபங்கம் செய்வதற்கு சமம். இதற்கு மேல் நான் என்ன சொல்லமுடியும். ஒரு பிடி மணலும் எடுக்க விடமாட்டோம்.

  வரும் காலத்தில் இயற்கை சீற்றம் போன்ற பிரச்சகைளை சந்திப்போம். வரும் காலத்தில் மழை குறைந்துவிடும் என்கின்றனர். எனவே, காவிரியில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப்பெரிய ஒரு சீர்கேடு. அடுத்த தலைமுறையை சீரழிக்கும் 3 பெரிய பிரச்சனைகள் மது, போதை பழக்கம், ஆன்லைன் சூதாட்டம். பார் நடத்துவது என்பது சட்டவிரோதமானது. எனவே பார்கள் இருக்கக்கூடாது என்று அன்புமணி கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் சந்துக்கடைகள் உள்ளன. அமைச்சருக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றனர். அதன்படி கடைகளை மூடவேண்டும்.பாமக 2.0 என்பது 2026ல் தமிழகத்தில் பாமக ஆட்சி நடைபெறும். ஒருமித்த கருத்துள்ள அமைப்புகள், கட்சிளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எடுப்போம் என்றார்.

  Must Read : கொடுங்கையூர் லாக்கப் டெத் - காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

  உண்மையான எதிர்க்கட்சி வேலையை நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்று கூறிய அன்புமணி ராமதாஸ் மற்ற கட்சிகளுடன் ஒப்பிட தான் விரும்பவில்லை என்றார்.

  செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Anbumani ramadoss, Karur, Mekedatu dam, PMK