Home /News /karur /

பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுனர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்

பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுனர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்

கரூரில் பெண் பயணிக்கு அவமரியாதை

கரூரில் பெண் பயணிக்கு அவமரியாதை

Karur : கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு, வேறு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில், ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் நடத்துனர் மகேந்திரன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்தும்  வேறு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    கரூரில் இருந்து ஆலமரத்துப்பட்டி வரை செல்லக்கூடிய நகரப்பேருந்து கோடங்கிபட்டி என்ற பகுதியில் வந்தபோது தனது குழந்தையுடன் பெண் பயணி ஒருவர், பொருட்களை ஏற்றி விட்டு, குழந்தையையும் பேருந்தில் ஏறியுள்ளார்.

    பின்னர், அந்த பெண் பயணி ஏறுவதற்கு முன்பாக, பேருந்தை ஓட்டுநர் இயக்கியபோது அவர் ‘குழந்தை... குழந்தை’ என்று கத்திக்கொண்டே ஓடியதால், அருகில் இருந்த பொதுமக்கள் அந்த பேருந்தை துரத்தி பிடித்து முற்றுகையிட்டு நிறுத்தினர்.

    அப்போது, இலவச பயணச் சீட்டில் வரக்கூடிய பெண் பயணியை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கரூர் மண்டல பொது மேலாளர் குணசேகரன் பரிந்துரையின் பேரில், ஓட்டுநர் பன்னீர்செல்வம் காரைக்குடி மண்டலத்திற்கும், நடத்துனர் மகேந்திரன் தேவகோட்டை மண்டலத்திற்கும்  இடமாற்றம் செய்து கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    Must Read : கேரளா தங்கம் கடத்தலில் பினராயி விஜயன், குடும்பத்தினருக்கு தொடர்பு... ஸ்வப்னோ சுரேஷ் அதிர்ச்சி தகவல்

    மேலும், அவர்கள் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Govt Bus, Karur, Woman

    அடுத்த செய்தி