ஹோம் /நியூஸ் /கரூர் /

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா - கரூரில் பாதுகாப்புக்கு சென்ற பெண் எஸ்ஐ மீது தாக்குதல்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா - கரூரில் பாதுகாப்புக்கு சென்ற பெண் எஸ்ஐ மீது தாக்குதல்

தாக்கப்பட்ட பெண் எஸ்ஐ

தாக்கப்பட்ட பெண் எஸ்ஐ

கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவையொட்டி பாதுகாப்புக்கு சென்ற பெண் எஸ்ஐ மீது பகீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India

கரூரில்  வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தேவராட்டம் நடத்துவதற்கும், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விழாவுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள் ஜவகர் பஜார் பகுதியில் ஊர்வலமாக வந்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பியவாறு இவர்கள் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊர்வலம் நடத்த தடை விதித்தனர். ஆனாலும் தடையை மீறி சிலர் ஆக்சிலேட்டரை முறுக்கியவாறு அத்துமீற முயன்றனர். இதனைக் கண்ட பெண் போலீஸ் எஸ்ஐ பானுமதி என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களின் வண்டியில் இருந்து சாவியை எடுத்துள்ளார். ஆத்திரமடைந்த இளைஞர்கள் பெண் எஸ்ஐ மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்புக் கொள்ளாத கூட்டத்தினர், கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். போலீசார் தடியை கையில் எடுத்ததும் கூட்டத்தினர் நாலாபுறமும் சிதறி அடித்து தலை தெறிக்க ஓடினர்.

' isDesktop="true" id="867548" youtubeid="gSywbb8epCc" category="karur">

வாகனங்களை ஆங்காங்கே அப்படியே விட்டு விட்டு கூட்டத்தினர் ஓடி மறைந்தனர். சில இளைஞர்கள் தடியடியில் சிக்கி காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் கரூர் பேருந்து நிலையம் அருகில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Attack on Women, Crime News, Karur, Police, Police Lathi Charge