கரூரில் ஆயுதபூஜையையொட்டி, 90ஸ் கிட்ஸ்கள் விரும்பும் மிட்டாய்களுடன் கூடிய தின்பண்டகடை துவங்கப்பட்டுள்ளது.
1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான தாத்தா, பாட்டிகள் 90ஸ் கிட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும், 1990 காலகட்டங்களில் பிறந்து குழந்தைகளாக வளர்ந்து வந்த தற்போதைய இளைஞர்கள், இந்த கடைகளில் அதிக அளவில் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருப்பார்கள்.
1990-களில் பள்ளிக்கு சென்று படித்த குழந்தைகளின் தின்பண்டமே இந்த மிட்டாய்கள் தான். காலம் மாற, மாற அந்த மிட்டாய்களும் மாறிடுச்சு. ஆனாலும், 90-ஸ் கிட்ஸ் பலரும் சின்ன வயதில் சாப்பிட்ட மிட்டாய்களை மறுபடி சுவைத்து பார்த்திட மாட்டோமா என்று பல நாட்கள் ஏங்கியிருப்பார்கள்.
கரூரில் மீண்டும் அந்த மிட்டாய்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், கரூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கடை கடையாக தேடி அலைந்து வாங்கி வந்து புதிதாக 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்றை துவங்கியுள்ளனர்.
ஜவ் மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம், மம்மி டாடி பாக்கு என 90களில் சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மிட்டாய் வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கடையை நோக்கி தற்போதைய 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள், பெண்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
செய்தியாளர்: தி.கார்த்திக்கேயன், கரூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.