Home /News /karur /

50 பைசா கொண்டு வந்தால் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி.. கரூரில் அலைமோதிய கூட்டம்

50 பைசா கொண்டு வந்தால் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி.. கரூரில் அலைமோதிய கூட்டம்

கரூர்

கரூர்

Karur | கரூரில் உணவகம் சார்பில் வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டது. 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு விடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூரில் 50 பைசா கொண்டு வருபவருக்கு சிக்கன் பிரியாணி என்ற தனியார் பிரியாணி கடை அறிவிப்பால் நிரம்பி வழிந்த வாடிக்கையாளர் கூட்டம் கூடிய நிலையில் அனுமதி பெறாமல் சலுகை அறிவித்த பிரியாணி கடைக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    பொதுவாக உணவகங்கள் திறப்பு விழா போன்ற விழாக்களை கொண்டாடுவதற்காக 50 பைசா, 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்குவதை டிரெண்டாக்கி வருகின்றனர். அதை வாங்குவதற்கு எனக் கூட்டம் கூடுவது, பிரியாணி பொட்டலம் தீர்ந்து போவது, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திறந்த அன்றைக்கே கடையை மூடுவது போன்ற அலப்பறைகளும் நடந்த வண்ணம் தான் உள்ளன.

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் தனியார் பிரியாணி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் துவங்கி ஒரு ஆண்டு ஆனதை முன்னிட்டு ஆண்டு விழா கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு உணவகம் சார்பில் வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டது. 50 பைசா கொண்டு வருபவர்களுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு விடப்பட்டது.

    Read More : ஸ்கூட்டியில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடிய கும்பல்.. சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை


    இந்த அறிவிப்பை அடுத்து பிரியாணி உணவகத்திற்கு வாடிக்கையாளர் கூட்டம் அலை மோதியது. நூறு நபர்களுக்கு 50 பைசாவை பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கப்பட்டது. வாடிக்கையாளர் கூட்டம் கட்டுக்குள் கொண்டு வர முடியாத அளவிற்கு அலை மோதிய காரணத்தால், தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் அப்பகுதிக்கு வந்து உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அனுமதி பெறாமல் இதுபோன்று சலுகைகள் விடக்கூடாது என்று எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: தி.கார்த்திகேயன்
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Biriyani, Karur

    அடுத்த செய்தி